×

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை அவசரதேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து அமைப்பு அனுமதி..!

டெல்லி: ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. விராபின் மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு பலன் அளிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விராபின், லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆன்டிவைரலுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேர் நாள் 7 க்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் மணிநேரத்தையும் குறைக்கிறது.நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான துணை ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு மற்றும் தோல்வியை இந்த ஆன்டிவைரல் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Indian , Echo of Corona Infection: Indian Pharmaceutical Organization Permits to Use Zydus Cadila Corona Vaccine for Emergency ..!
× RELATED இந்திய மக்களை பற்றியே சிந்திக்கிறேன்: டிரன்ட்போல்ட் உருக்கம்