சென்னை சேப்பாக்கத்தில் மும்பை-பஞ்சாப் இன்று மோதல்..! வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?

சென்னை:  ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சென்னையில் நடக்கும் 17வது லீக் போட்டியில்  நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  மும்பை முதல் போட்டியில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்த நிலையில், 2வது  போட்டியில் கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 13 ரன்  வித்தியாசத்திலும் வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்  வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியில் இருந்து  மீண்டும் 3வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப்  முதல் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அதன்பின்னர் சென்னையிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும்,  டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், கடைசி போட்டியில், சன்ரைசர்சிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்தது.

பேட்டிங்கில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வாலை நம்பியே உள்ளது. நிகோலஸ் பூரன் அவுட் ஆப் பார்மில் உள்ளார். கிறிஸ்கெய்லுக்கு இன்று கல்தா கொடுக்கப்படலாம். பந்து வீச்சும் சொதப்பலாக உள்ளது. ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் பஞ்சாப் களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 14ல் மும்பை, 12ல் பஞ்சாப் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3ல் மும்பை, 2ல் பஞ்சாப் வென்றுள்ளன.

Related Stories: