×

மே, ஜூன் மாதத்திற்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச தானியங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.26,000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவர் என்று மோடி தெரிவித்துள்ளார். பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 மாதங்கள் தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் சென்ற வருடம் நிவாரணம் அளிக்கப்பட்டதை போல் இந்த வருடமும் நிவாரணம் அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். சுமார் 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் 5 கிலோ உணவு தானியங்களை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடைகள் மூலமாக இந்த உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும். மாநிலங்களுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்ற வருடம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த போது வாழ்வாதாரம் இழந்து வாடும் மக்களுக்கு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலே அரசு நடவடிக்கை எடுத்ததோ அதேபோலவே இந்த முறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்காக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏழை மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் விசயமாக இருக்க வேண்டும் என இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

Tags : Modi , Cereals, Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...