மதுபிரியர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் காய்ச்சல் பரிசோதனை

மதுரை: டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களுக்கு சானிட்டைசர் வழங்கவும், காய்ச்சல் அறியவும் ஊழியர்களை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவிவருகிறது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களுக்கு சானிட்ைடசர் வழங்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 3500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கும் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடை முன்பாக அமர்ந்து கொள்கின்றனர். மதுவாங்க வருபவர்களுக்கு சானிட்டைசரை வழங்குகின்றனர். பின்னர் காய்ச்சல் இருக்கிறதா என அறிய கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்கின்றனர்.

Related Stories:

>