கோடைகால உடல் பாதுகாப்பிற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம் நுங்கு: அரசு டாக்டர் ஆலோசனை

மன்னார்குடி: மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், வடுவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. காலையில் தொடங்கும் வெயில் மாலை வரை நீடிக்கிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடும் வெயில் காரணமாக சின்னம்மை, வைரஸ் காய்ச்சல் மற்றும் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் உடல் உஷ்ணமாகாமல் பாதுகாக்க நீர்சத்து மிகுந்த இயற்கையான நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட பழவகைகளை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில், மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், வடுவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது நுங்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நுங்கு சாப்பிடுவதன் மூலம் உடம்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் குளிர்ச்சியும் தருவதால் மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். இது குறித்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கூறுகையில், கோடை காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம்தான் நுங்கு. நுங்கில் வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது. நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். ரத்த சோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்குடன் சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும். சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும். நுங்குவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அனைவரும் நுங்கு சாப்பிடுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார். நுங்குடன் சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும். நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும். சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும். நுங்குவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

Related Stories: