அதிகரித்து வரும் விதி மீறிய கட்டிடங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குன்னூர்: விதி மீறிய கட்டிடங்கள் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதில் நீரோடைகளை மறைத்து உயரமான அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் நிலச்சரிவு பகுதியில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலிக்கல் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்து கட்டடங்கள் கட்டுவது  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உலிக்கல் பஞ்சாயத்து அருகாமையில் விதிகளை மீறி உயரமான கட்டிடங்களில் அதிகளவில் கட்டப்பட்டு வருகிறது.

இதுமட்டுமன்றி இதுபோன்ற காட்டேஜில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளை கவருவதற்காக உயரமான பாலங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளது. இதுபோன்று பாலங்கள் அமைக்க அதிகாரிகள் எவ்வாறு அனுமதி அளித்தனர் என அப்பகுதி மக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் பாலத்தின் பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சாதாரண ஏழை,எளிய மக்கள் அத்துமீறி சிறிய சுவர் அமைத்தாலே அதிகாரிகள் இடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதுபோன்று விதிமீறி மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் பாலங்களின் பணிகளை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தியுள்ளனர். மேலும் விதி மீறிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: