ஆக்சிஜன் முற்றிலும் இல்லை என கைவிரிக்கும் டெல்லி மருத்துவமனைகள்... உயிருக்கு துடித்தபடி வேறு மருத்துவமனைக்கு செல்லும் அவலம்!!

டெல்லி: கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம் அடைந்துள்ளது. பிரபல மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள், அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளால் மருத்துவர்கள் செய்வதறியாது தவித்து  வருகின்றனர்.

பல்நோக்கு மருத்துவமனைகள் உட்பட 6 மருத்துவமனைகள் தங்களது முற்றிலும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்துவிட்டனர். பிரபல மருத்துவமனைகள் பலவும் தங்களிடம் ஒரு சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தனியார் மருத்துவமனையில் திடீரென ஆக்சிஜன் தீர்த்தத்தால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உயிருக்கு போராடிய நிலையில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.உயிருக்கு துடித்தபடி சென்ற நோயாளிகளை கண்டு அவர்களது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Related Stories: