ரூ.22 லட்சம் மதிப்பிலான காரை விற்று 10,000 நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் ஆக்சிஜன் மனிதர்!!

மும்பை : கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக தனது விலை உயர்ந்த காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி விநியோகிக்கும் மும்பை இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், நோயாளிகள் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.இந்த நிலையில் மும்பை மலட் பகுதியைச் சேர்ந்த ஷாஹ்னாவாஸ் ஷேக், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு தம் சொந்த செலவில் வாங்கி கொடுத்து வருகிறார்.

தற்போது கொரோனா 2ம் அலை தீவிரம் அடைந்து வரும் காலகட்டத்தில் தன் குழுவினருடன் சேர்ந்து தனியாக கட்டுப்பாட்டு அறை அமைத்து நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார் ஷேக். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.22 லட்சம் மதிப்பிலான காரை விற்ற அவர், அதன் மூலம் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கி உள்ளார். ஆக்சிஜன் மனிதர் என்று மும்பை மக்களால் அழைக்கப்படும்  ஷேக், இதுவரை 10 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கியுள்ளார். அவரது சேவைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories: