'oxygen cylinder near me'.. மூச்சுக்காற்றுக்காக ஏங்கும் மக்கள் : கூகுள் தேடுப்பொறியில் ஆக்சிஜன் தரவுகளை தேடும் இந்தியர்கள்!!

மும்பை : கொரோனா தொற்றின் அதிகரிப்பால் ஆக்சிஜன் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கூகுளில் இது தொடர்பான தகவல்களை தேடும் பயனர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கூகுள் இணையத்தளத்தில் பயனர்கள் தேட பயன்படுத்தும் வார்த்தைகளை கொண்டு என்ன மாதிரியான தகவல்களை இணையதளத்தில் மக்கள் தேடுகிறார்கள் என்பதை கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலமாக தெரிந்துக் கொள்ள முடியும்.

கூகுள் ட்ரெண்ட்ஸ் பக்கத்தில் தேடப்பட்ட வார்த்தைகள் 0 முதல் அதிகபட்சமாக 100 வரை வரிசைப்படுத்தப்படும். அதில் ஆக்சிஜன் சிலிண்டர் என்ற வார்த்தையை தேடுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி 32 ஆக இருந்தது. இதே எண்ணிக்கை ஏப்ரல் 18 அன்று 99 ஆக அதிகரித்தது. அதே போல் ஆக்சிஜன் என்ற வார்த்தையின் தேடல் கடந்த ஒரு வாரமாகவே உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக டெல்லியைச் சேர்ந்த மக்கள் அதிகமுறை ஆக்சிஜன் என்ற வார்த்தையை ஒட்டிய தரவுகளை அதிகமுறை இணையத்தில் தேடி வருகின்றனர். இதற்கு அடுத்த முறையே 3வது, 4வது, 8வது இடங்களில் உத்தரப் பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. மிக குறைவாக இந்த வார்த்தையை குறிப்பிட்டு தேடிய மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. வெறும் நாசிக் ஆக்சிஜன் விபத்து குறித்தும் கேரள ஆக்சிஜன் ஆலை குறித்தும் மக்கள் அதிகமாக தேடி உள்ளனர்.

அடுத்ததாக ரெம்டிசிவிர் மருந்து குறித்தான தேடலும் இணையதளத்தில் அதிகமாக உள்ளனர். ரெம்டிசிவிர் என்ற வார்த்தையை தேடியதில் மராட்டியம் முதலிடத்திலும் டெல்லி 2ம் இடத்திலும் குஜராத் 4ம் இடத்திலும் தமிழகம் 15வது இடத்திலும் உள்ளது. ரெம்டிசிவிர் மருந்து போலவே கொரோனாவுக்கான வேறு மருந்துகள் குறித்தும் தேடல் கணிசமாக அதிகரித்துள்ளது. நியர் மீ  என்ற வார்த்தையை பயன்படுத்தி அருகில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கும் இடங்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள், கொரோனா பரிசோதனை இடங்கள் குறித்த தேடலும் 100 முதல் 600% வரை அதிகரித்துள்ளது. இதிலும் ஆக்சிஜன் நியர் மீ என்ற தேடலை டெல்லி மக்களும் வேக்சினேஷன் நியர் மீ என்ற தேடலை கேரள மக்களும் அதிகளவில் கடந்த வாரத்தில் கூகுள் வழியாக தேடி உள்ளனர்.

Related Stories: