கோடைகால தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் கோடையின் உச்சிவெயிலை நினைவுபடுத்தும் அளவிற்கு, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தேமுதிக சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும். ஆண்டுதோறும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும். மேலும் கொரோனா பரவி வருவதால் மாஸ்க், சானிடைசர் வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த சீரிய பணிக்கு என்றும் போல் இதயமார்ந்த வாழ்த்துக்கள் உண்டு. இக்கோடைகாலம் முழுவதும் இப்பணியினை செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories:

>