மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 25ம் தேதி இறைச்சி கூடங்கள் மூடல்: மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னை மாநகரட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை). மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.எனவே, அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>