நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று 12 ஆயிரத்தை தாண்டியது: மொத்தம் 13,317 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று 12,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 13,317 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,15,653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12,652 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

அதில் சென்னையில் மட்டும் 3,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 89,428 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,37,711 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 7,583 பேர் ஆண்கள், பெண்கள் 5,067 பேர்  மற்றும் திருநங்கைகள் 2 பேர். 7,526 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், 59 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 13,317 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 24 பேர் நேற்று உயிரிழந்தனர்.

நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு 906, கோவை 689, கடலூர் 178, திண்டுக்கல் 212, ஈரோடு 225, காஞ்சிபுரம் 392, கன்னியாகுமரி 220, கிருஷ்ணகிரி 318, மதுரை 495, நாகப்பட்டினம் 201, நாமக்கல் 223, ராணிப்பேட்டை 179, சேலம் 411, தென்காசி 281, தஞ்சாவூர் 283, தேனி 160, திருப்பத்தூர் 139, திருவள்ளூர் 510, திருவண்ணாமலை 201, திருவாரூர் 102, தூத்துக்குடி 354, திருநெல்வேலி 449, திருப்பூர் 224, திருச்சி 359, வேலூர் 303, விழுப்புரம் 146, விருதுநகர் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இரண்டு மடங்கு உயிரிழப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 218 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை 579 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 12 நாட்களில் மட்டும் 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ஏப்ரல் 11ம் தேதி 12,908, 12ம் தேதி 12,927, 13ம் தேதி 12,945, 14ம் தேதி 12,790, 15ம் தேதி 12,999, 16ம் தேதி 13,032, 17ம் தேதி 13,071, 18ம் தேதி 13,113, 19ம் தேதி 13,157, 20ம் தேதி 13,205, 21ம் தேதி 13,258, 22ம் தேதி 13,317 என 409 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு மடங்காக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

Related Stories:

>