மாஸ்க் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.56.8 லட்சம் வசூல்: போலீஸ் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக வடக்கு மண்டலத்தில் 4,744 பேர் மீதும், மத்திய மண்டலத்தில் 3,116 பேர் மீதும், மேற்கு மண்டலத்தில் 4,177 பேர் மீதும், தெற்கு மண்டலத்தில் 9,868 பேர் மீதும், நகர் புறங்களில் 4,904 பேர் மீதும் சென்னை நகரில் 1,235 என மொத்தம் 28,044 பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் அபராதமாக ரூ.56 லட்சத்து 8 ஆயிரத்து 800 வசூலித்துள்ளனர்.

அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது நேற்று முன்தினம் மட்டும் 733 வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.3,66,500 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>