தடுப்பூசி நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்வது மக்களின் உயிரோடு விளையாடும் செயல்: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோயை ஒழிப்பதில் மத்திய பாஜ அரசு தோல்வி அடைந்த நிலையில், தற்போது 2வது அலையை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத் தடுமாறி திணறிக் கொண்டிருக்கிறது. கொடிய கொரோனா நோயினால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போடுவது தான். இந்நிலையில் தான் மாநில அரசுகளும், தனியார் துறையும் நேரடியாக தடுப்பூசி கொள்முதலை செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.

இதன்மூலம் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து பொறுப்பற்ற நிலையில் செயல்பட்டிருக்கிறது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. தடுப்பூசி, ஆக்சிஜன், உயிர் காக்கும் ரெம்டிசிவிர் மருந்து ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்திய மக்களின் உயிரோடு விளையாடி வருகிற மத்திய பாஜ அரசையும், பிரமர் மோடியையும் மக்கள் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய கொடூரமான நிலைக்கு காரணமானவர்களுக்கு உரிய பாடத்தை, உரிய நேரத்தில் மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: