கொரோனா ஓடியது எடியூரப்பா டிஸ்சார்ஜ்

பெங்களூரு: கொரோனா தொற்று காரணமாக மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  கர்நாடகா முதல்வர் எடியூரப்பா குணம் அடைந்து வீடு திரும்பினார். கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இவருக்கு கடந்தாண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள மணிப்பால்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது குடும்ப  டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் முதற்கட்ட  சிகிச்சையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று காலை அவருக்கு  கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நெகட்டிவ் என்று  தெரிய வந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் நேற்று காலை அவரை டிஸ்சார்ஜ்  செய்தனர். முன்னதாக  மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முதல்வர்  எடியூரப்பா, ‘‘6 நாள் கொரோனா சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். இப்போது, எனது உடல் முழு அளவில் முழு குணமடைந்து விட்டதாக  உணர்கிறேன்,’’ என்றார்.

Related Stories:

>