காஷ்மீரில் ஊடுருவ முடியவில்லை பஞ்சாப் மாநில எல்லையை குறி வைக்கும் தீவிரவாதிகள்: 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

சண்டிகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் தீவிர கண்காணிப்பாலும், வேட்டையாலும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கணிசமாக முடக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக அவர்கள் ஊடுருவும் அனைத்து வழிகளும் முடக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முடியாமல் தவிக்கின்றனர். இதனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கவனம் இப்போது பஞ்சாப் மாநில எல்லையை நோக்கி சென்றுள்ளது. அங்குள்ள சர்வதேச எல்லை வழயாக அந்த மாநிலத்துக்குள் ஊடுருவல் செய்யவும், ஆயுதங்களை கடத்தவும் முயற்சிகள் செய்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம், பதன்கோட் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோட்டின் ஒரு பகுதி அமைந்துள்ளது. பாதுகாப்புகள் நிறைந்த இடமான இங்கு, நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. இதை பாதுகாப்பு படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால், உஷாரான பாதுகாப்பு படை வீரர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3  தீவிரவாதிகள் திரும்பி பாகிஸ்தானுக்குள் ஓடி விட்டனர்.

Related Stories:

>