மேற்கு வங்கத்தில் நடந்த 6ம் கட்ட தேர்தலில் 79.6% வாக்குப்பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 5 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், நேற்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தர் தினஜ்பூரில் 9, பர்பா பர்தமான் மாவட்டத்தில் 8, நடியாவில் 9, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 17 என மொத்தம் 43 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், 27 பெண்கள் உட்பட மொத்தம் 306 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.

நேற்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.சில இடங்களில் வன்முறைகள் அரங்கேறின. பாஜ - திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் 79.06 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவரையில் 223 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 7வது கட்டமாக 26ம் தேதி 36,  8வது கட்டமாக 29ம் தேதி 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

Related Stories: