போடாதவருக்கு போட்டதாக கணக்கு காட்டி புது மோசடி? கொரோனா ெடஸ்ட் எடுத்தவருக்கு கோவாக்சின் போட்டதாக மெசேஜ்: வத்தலக்குண்டுவில் வசிக்கும் சென்னை இன்ஜினியர் ‘ஷாக்’

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). சென்னையில் இன்ஜினியராக பணிபுரிகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர், நேற்று முன்தினம் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொேரானா டெஸ்ட் எடுப்பதற்காக சாம்பிள் கொடுத்தார். அங்கிருந்த லேப் டெக்னீசியன் இன்னும் 2 மணி நேரத்தில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். நாளை ரிசல்ட் வந்து விடும் என கூறினார்.  அவர் சொன்னது போலவே அடுத்த 2 மணி நேரத்தில் மெசேஜ் வந்தது. அத்துடன் ஒரு ஆன்லைன் லிங்க்கும் வந்திருந்தது. அதில் வாஞ்சிநாதன் சாம்பிள் கொடுத்ததற்கு முதல்நாள் கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தடுப்பூசியே போடாத நிலையில், வெறும் கொரோனா டெஸ்ட் மட்டும் எடுத்த தனக்கு, தடுப்பூசி போட்டிருப்பதாக வந்த மெசேஜை கண்டு அதிர்ச்சியடைந்த வாஞ்சிநாதன், உடனே லேப் டெக்னீசியனுக்கு போன் செய்தார். அதற்கு டெக்னீசியன், ‘‘தடுப்பூசி போட்டதாக என்ட்ரி பண்ணினால்தான் டேட்டாவுக்குள் நுழைய முடியும். அதனால், அப்படித்தான் செய்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

உடனே வாஞ்சிநாதன், ‘‘இதை நீங்கள் உங்கள் மேலதிகாரிகளிடம் சொல்லி சரிசெய்ய வேண்டியதுதானே?’’ என்று கேட்டுள்ளார். ஆனால், லேப் டெக்னீசியன் பதில் சொல்லாமல் போனை வைத்து விட்டார் என்று வாஞ்சிநாதன் கூறுகிறார். இச்சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டதாக கணக்கு காட்டி முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories: