மே1-ம் தேதி முதல் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி....தமிழக அரசு அறிவிப்பு.!!!

சென்னை: தமிழ்நாட்டில் மே1-ம் தேதி முதல் இலவச சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து,3 வது தடுப்பூசி திட்டத்தில் மே-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் நேற்று திடீரென விலையை உயர்த்தியது. மத்திய அரசுக்கு இதுவரை ரூ.150க்கு விற்கப்பட்டு வந்த கோவிஷீல்டின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.400க்கு தடுப்பூசியை கொள்முதல் செய்யும் மாநில அரசுகள் அவற்றை மக்களுக்கு இலவசமாக தருவார்களா? அல்லது மானியம் வழங்குவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மே1-ம் தேதி முதல் இலவச சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். இலவச சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். அதிக பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

கொரோனா உடையவர்களுடன் தொடர்புடையவர்களை உடனுக்குடன் கண்டறிந்து பரிசோதனை செய்வதால் தொற்று பரவுவதை தடுக்க இயலும். கொரோனா RT-PCR பரிசோதனைகள் மேலும் உயர்த்தப்படுவதால் தொற்று விகிதம் அனைத்து மாவட்டங்களில் 10% கீழ் குறைக்கப்படும். மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளையும் ஏற்படுத்தி தேவையான மருத்துகளை வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அன்றைய மாநிலமான கேரள மாநிலத்திலும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: