கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு !

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று முன்பைவிட பலமடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதில் பலருக்கு ஆக்சிஜன் கிடைப்பதில்லை எனவும் படுக்கைகள் போதுமான அளவும் இல்லை எனவும் அங்காங்கே புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 27ஆயிரத்து440 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,258 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அதிமுக அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை பொறுப்புணர்ந்து அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிகின்றனர். ஆனால், மற்ற பகுதிகளில் அப்படி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: