'கொரோனா தடுப்பு நிவாரணம் வழங்குவதில் தமிழகத்துக்கு பாரபட்சம்'!: மத்திய அரசு மீது திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு..!!

சென்னை: கொரோனா தடுப்பு நிவாரணம் வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா நகர் பகுதிகளில் வசிக்கும் 1000 பேருக்கு கபசூர குடிநீர், ஒரு நபருக்கு 5 முகக்கவசம், சோப் உள்ளிட்ட பொருட்களை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பியதற்கு அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கொரோனா தடுப்பு உபகரணங்களை திமுகவினர் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போதுமான கையிருப்பு இல்லை என தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு 3 விதமான விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டது நியாயம் இல்லை என என்றார். மேலும் கொரோனா பேரிடர் நிவாரணத்தை பொறுத்தவரை மத்திய அரசு தமிழகத்துக்கு இன்று வரை பாரபட்சம் காட்டிக்கொண்டிருந்தது என்று திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

Related Stories:

>