மேற்கு வங்கத்தில் 6ம் கட்ட தேர்தலிலும் வன்முறை : துப்பாக்கிச் சூடு, தேர்தல் அலுவலருக்கு அரிவாள் வெட்டு!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 6ம் கட்ட தேர்தலிலும் மோதல், துப்பாக்கிச் சூடு என வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 43 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குனியா என்ற இடத்தில் வாக்குச் சாவடிக்கு முன்பு இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை எச்சரிக்கும் விதமாக மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் வானில் சுட்டு விரட்டியடித்தனர்.

ஒரு வீட்டில் துப்பாக்கிக் குண்டுகள் பட்டு சேதம் அடைந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். ராய்க்குஞ் என்ற இடத்தில் வாக்களிக்க சென்ற சிலர் சரியான அடையாள அட்டையை காட்டாததால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் தேர்தல் அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதால் காயம் அடைந்தார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் டிரோன்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்பட்டன. இதே மாவட்டத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. கட்வா என்ற இடத்தில் வாக்குச் சாவடி முன்பு உடல்நலம் பாதித்து மயக்கம் அடைந்த பெண் ஒருவருக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் முதலுதவி அளித்தனர். 

Related Stories:

>