செங்கல்பட்டு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளி அவதி

செங்கல்பட்டு: சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் பாதிக்கப்படுவது செங்கல்பட்டு மாவட்டம் தான். ஆனால் இங்குள்ள அரசு மருத்துவமனையில் சுமார் 800க்கும் அதிகமான செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. தொகுப்பூதியத்தில் புதிதாக 150 செவிலியர்கள் நியமிக்கப்பட்டதில் 35 பேர் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியை பொறுத்தவரை 3000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை பொறுத்தவரை 1343 நோயாளிகள் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பால் 450 புதிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மருத்துவமனையில் 1040 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் வெறும் 152 பேர் மட்டும் தான் பணியாற்றி வருகின்றனர். ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

Related Stories: