அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை.. இயல்புக்கு அதிகமான வியர்வை - தலை சுற்ற வைக்கும் வானிலை அறிக்கை!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை :

தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சிகாரணமாக

ஏப்ரல் 22 : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு ,தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 23 :மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,வேலூர், தென்காசி, திருநெல்வேலி ,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 24 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

காற்றின் ஈரப்பதம் 60 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உயரும். இதன் காரணமாக பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும் , இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் ,பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும் ,வெள்ளை மற்றும் வெளிர் ஆடைகளை அணிவது சிறந்தது,

Related Stories: