25 பேருடன் 2 மணி நேரம் மட்டுமே திருமண விழா... மாவட்டம் டூ மாவட்டம் பயணத்திற்கு தடை : மராட்டியத்தில் அதிரடி!!

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு நேர ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர லாக்டவுன் முதலில் அமல்படுத்தப்பட்டது. வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில்,  கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. இந்த நிலையில் லாக்டவுனுக்கு நிகரான கடும் கட்டுப்பாடுகளை மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதல்கள்படி, இன்று முதல் 8 மணி முதல் மே 1ம் தேதி வரை மாநிலத்திற்குள் 1 இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு உள்ளவர்கள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே லோக்கல் மற்றும் மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களிடையேயான வாகன போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவசரத்தேவைகள் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு கார்களில் செல்ல முடியும்.

அரசு அலுவலகங்கள் 15% ஆட்களுடன் செயல்படுவதற்கும், அரசு பேருந்துகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அன்றி பிற நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம்.

அரசு அலுவலர்கள் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வெளியே செல்லலாம்.

திருமண விழாக்கள் மண்டபத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடக்கக்கூடாது. 25 நபர்களுக்கு மேல் விழாக்களில் பங்கேற்க கூடாது.

இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 50,000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த உத்தரவு இன்று முதல் மே 1ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: