கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் நடவடிக்கை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...அதிகாரிகள் தகவல்.!!!

சென்னை:  தமிழகத்தில் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்குள் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 1,303 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இதில், கொரோனா நோயாளிகளுக்காக 210 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆம்புலன்ஸ் சேவை முலம் தினமும் 5,200 நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதில், தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் 2,200 பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, இதுவரை கொரோனாவால் 10,25,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,27,440 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13,258  பேர் உயிரிழந்துள்ள நிலையில், 84,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: