சென்னையில் கத்திமுனையில் கல்லூரி பேராசிரியர் கடத்தல்

சென்னை: சென்னை மாங்காடு அருகே கத்திமுனையில் கல்லூரி பேராசிரியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாங்காடு அடுத்த கமலா நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் அருண் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சொகுசு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அருணை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதோடு அவரை காரில் கடத்தி சென்றனர்.

அதனை தடுக்க முயன்ற நண்பர் மணிவர்மாவை தாக்கிவிட்டு அவரது காரையும் கடத்தி சென்றனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

>