தலை சுற்றவைக்கும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.36,296க்கு விற்பனை : வாடிக்கையாளர்கள் ஷாக்!!

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.208 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது.

இன்று கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,537க்கும், சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் உயர்ந்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Stories: