முகக்கவசம் போடலனா ரூ.200 ...எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தலைமை செயலக ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை : தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் 3000க்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது . குறிப்பாக முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக முதன்மை செயலாளர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், தலைமைச் செயலக ஊழியர்கள், பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் அபராதம் விதிக்கப்படும்  என்றும் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.

Related Stories: