ஆதரவற்றவர்களை மீட்க மாநகர போலீஸ் சார்பில் காவல் கரங்கள் திட்டம்

சென்னை: சென்னை மாநகரில் சாலைகளில் ஆதரவற்று சுற்றித்திரிபவர்களை மீட்டு மறு வாழ்வு அளிக்கும் வகையில் சென்னை மாநகர காவல் துறை சார்பில் ‘காவல் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று தொடங்கி வைத்தார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசு துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அரசுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இயங்கும் இந்த திட்டத்தில் போலீசார் இணைந்து செயல்படுவார்கள். மீட்கப்படும் ஆதரவற்றவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் அனைத்து உதவிகளையும் போலீசார் மேற்கொள்கின்றனர். ஆதரவற்றவர்களை மீட்கும் வகையில் புதிய வாகனம் மற்றும் உபகரணங்களை போலீசார் மீட்பு குழுவினருக்கு போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

Related Stories: