கொரோனா பணி மேற்கொண்டதற்காக தமிழக அரசு ரூ135 கோடி ஒதுக்கீடு

ெசன்னை: கொரோனா சிறப்பு வார்டுக்காக ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கொரோனா அலை ஏற்பட்டபோது கொரோனா சிறப்பு வார்டுகளை ஒப்பந்ததாரர்கள் அமைத்து கொடுத்தனர். ஆனால், அவர்களுக்கு ₹135 கோடி கொடுக்கவில்லை. அதை ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. ஆனால், தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமெடுத்ததாலும், அனைத்து மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.

எனவே, கூடுதலாக படுக்கைகள் ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி மேற்கொண்டதற்காக ரூ135.41 கோடியை விடுவித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதில், சிறப்பு வார்டுக்காக ரூ135.419 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Related Stories:

>