3 ஓஎன்ஜசி ஊழியர்களை தீவிரவாதிகள் கடத்தினர்

புதுடெல்லி: மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) கடந்த 1960ம் ஆண்டில் இருந்தே அசாமின் மேற்பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று காலையில் சிவசாகர் மாவட்டத்தில் வேலை நிமித்தமாக நிறுவனத்தின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தை துப்பாக்கிகளுடன் வழிமறித்த தீவிரவாதிகள், மூன்று ஊழியர்களை கடத்தி சென்றனர். கடத்தப்பட்டவர்களில் 2 பேர் பொறியாளர்கள், ஒருவர் தொழில்நுட்ப வல்லுநர் . கடத்திய நபர்கள் இதுவரை ஓஎன்ஜிசி நிறுவனத்தையோ, ஊழியர்களின் குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ளவில்லை. கடத்தப்பட்ட வாகனத்தை, நிமோனாகார்க்கின் காட்டுப் பகுதியில் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

Related Stories:

>