ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்ட நடிகர்

பெங்களூரு: கன்னட காமெடி நடிகர் சாது கோகிலாவின் சகோதரர் மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பிரபல நடிகர் என்பதால், நண்பர்கள் மூலம் சகோதரர் மகனுக்கு படுக்கை வசதி கிடைக்க ஏற்பாடு செய்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று நீங்கினாலும், செயற்கை ஆக்சிஜன் தேவைப்பட்டது. இதையடுத்து சாது கோகிலா பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பெற முயற்சித்தார். உடனே கிடைக்கவில்லை. அதிக பணம் செலவு செய்த பிறகுதான் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சாது கோகிலா மீடியா முன்பு கதறி அழுதார். ‘நட்சத்திர நடிகரான என்னாலேயே சகோதரர் மகனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பெற்றுத்தர முடியவில்லை. நீண்ட போராட்டம், நெடுந்தூர அலைச்சலுக்குப் பிறகுதான் சிலிண்டர் கிடைத்தது. ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை. பணம் இருந்தும் உடனே அதை வாங்க முடியாமல் அலைந்ததைப் பார்த்து வருத்தப்படுகிறேன். பிரபலமான எனக்கே இந் நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என அப்போதுதான் உணர்ந்தேன்’ என்றார்.

Related Stories:

>