கொரோனா காலத்திலும் ரூ.1.84 லட்சம் கோடி பிரீமியம்: எல்ஐசி சாதனை

சென்னை: கொரோனா பரவல் காலத்திலும், ரூ.1.84 லட்சம் கோடிக்கு புதிய பிரீமியத்தை ஈட்டி எல்ஐசி சாதனை படைத்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில், தனி நபர் காப்பீட்டு வணிகத்தில், முதல் வருட பிரீமிய வருவாயாக ரூ.56,406 கோடி ஈட்டி, முந்தைய ஆண்டை விட 10.11 % வளர்ச்சி அடைந்துள்ளது. இது எல்.ஐ.சி.யின் வரலாற்றிலேயே மிக அதிக முதல் வருட பிரிமியத் தொகையாகும். மேலும் 2.10 கோடி பாலிசிகளை பெற்றுள்ளது. பென்ஷன் மற்றும் காப்பீடு திட்டங்களிலும் புதிய உச்சமாக ரூ.1,27,768 கோடிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. எல்ஐசி பி அண் ஏசி மூலம் 1,46,910 பாலிசிகளும், ரூ.1,862.73 கோடி பிரீமியமும் ஈட்டியுள்ளது. பெருந்தொற்றால் சிரமங்கள் இருந்தபோதும், 2.19 கோடி முதிர்வு உரிமங்கள், பண மீட்சி உரிமங்கள் மற்றும் ஆன்விட்டிகள் மூலம் ரூ.1,16,265.15 கோடி வழங்கியுள்ளது. 2020-21 நிதியாண்டில் 9.59 லட்சம் இறப்புரிமங்கள் மூலம் ரூ.18,137.34 கோடி வழங்கப்பட்டுள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.

Related Stories:

>