ரூ.6 கோடி மோசடி வழக்கில் கேரள பெண் சென்னையில் கைது

சென்னை: சென்னை தி.நகரை சேர்ந்தவர் ரித்தன்யா (35). இவர், கேரளாவில் நண்பர்களுடன் சேர்ந்து மல்டிலெவல் மார்க்கெட்டிங் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது பலரிடம் ரூ.6 கோடிக்கு மேல் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் ரித்தன்யாவை கேரளா போலீசார் தேடி வந்தனர்.சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு ரித்தன்யா வந்து இருப்பதாக கேரளா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் விரைந்து வந்த கேரளா போலீசார் பாண்டி பஜார் போலீசார் உதவியுடன் ரித்தன்யாவை கைது செய்தனர்.

Related Stories:

>