கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது; தமிழகத்தில் ஒருநாள் உயிரிழப்பு 53 ஆக உயர்வு: சுகாதாரதுறை தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை: தமிழகத்தில் நேற்று மட்டும் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை பல நூறாக கூடிக் ெகாண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்க இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,12,661 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11,681 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 3,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 84,361 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 6,973 பேர் ஆண்கள், 4,708 பேர் பெண்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7,071 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 32 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதுவரை மொத்தம் 13,258 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 18 பேர் நேற்று உயிரிழந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆயிரத்தை நெருங்கும் செங்கை

தமிழகத்தில் நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையை  அடுத்து செங்கல்பட்டு 947, கோவை 715, கடலூர் 147, திண்டுக்கல் 185, ஈரோடு  284, காஞ்சிபுரம் 263, கன்னியாகுமரி 171, கிருஷ்ணகிரி 259, மதுரை 462,  நாமக்கல் 200, ராணிப்பேட்டை 203, சேலம் 401, தென்காசி 115, தஞ்சாவூர் 179, தேனி 148, திருவள்ளூர் 529, திருவண்ணாமலை 135, தூத்துக்குடி 275,  திருநெல்வேலி 426, திருப்பூர் 238, திருச்சி 357, வேலூர் 286, விழுப்புரம் 109, விருதுநகர் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: