தமிழக அரசிடம் கேட்காமல் வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதா?.. மத்திய அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: தமிழக அரசின் நிர்வாகத்தை கலந்தாலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலினை எந்த காரணத்திற்காகவும் ஏற்கமுடியாது.

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர்  இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: