18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு

ராய்ப்பூர்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. மக்களின் உயிர் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் உறுதியளித்துள்ளார். மத்திய அரசு போதிய அளவிலான கொரோனா தடுப்பூசிகளை வழங்க சத்தீஸ்கர் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.  

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது கட்டாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: