×

சென்னையில் நிரம்பி வழியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்; ரெம்டெசிவிர் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பின. படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் படுக்கைகள் நிரம்பியதால் மருத்துவர் தவச உடை மாற்றும் அறைகள் வார்டாக மாற்றும் செய்யப்பட்டுள்ளது. படுக்கைகள் கிடைக்காததால் அரசு மருத்துவமனையில் சேர ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. படுக்கை இல்லை என்பதை கூறாமல் வேறு காரணங்களை காட்டி நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் அளிக்கப்படுகிறது. கொரோனாவில் 2-ம் அலையில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடமில்லை.

ரெம்டெசிவிர் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்:

கொரோனா நோயாளிகளின் உயிரை காக்கும் ரெம்டிசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெம்டெசிவிர் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.2,500 முதல் ரூ.3,000 விலை உள்ள ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.7,000 வரை விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் டேமிபுளூ, ஸீலோபுளூ உள்ளிட்ட பிற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


Tags : Chennai ,Remtacivir , In Chennai, Government, Private Hospital, Remtacivir
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...