மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பு: நாசிக் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்ட விபத்தில் 22 நோயாளிகள் உயிரிழப்பு.!!!

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட விபத்தில் 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஜாகிர் உசைன் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டது. இந்த கசிவானது 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நாசிக் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடுத்தக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  நாசிக் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  ஏற்கனவே, பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் ஆக்சிஜன் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>