ஹேப்பி நியூஸ்.. மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கக் கூடியது கோவாக்சின : ஐசிஎம்ஆர் அறிவிப்பு!!

டெல்லி: கோவாக்சின் தடுப்பு மருந்து, உருமாறிய கொரோனா வைரஸையும் எதிர்ப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகிலேயே தினசரி பாதிப்பு அதிகமான நாடாக இந்தியா மாறியுள்ளது, இதனால் இந்திய சுகாதார அமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸின் புதிய உருமாறிய வகைகள் தடுப்பூசிகளை சவால் விடுத்து வருகின்றனர்.  

இந்தியாவில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவாக்சின் தடுப்பூசி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய வைராலஜி மையம் இணைந்து கோவாக்சின் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில், சார்ஸ் - கோவி 2 உள்பட இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் கோவாக்சின் தடுப்பூசிக்கு உள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவாக்சின் தடுப்பு மருந்து, பிரிட்டன், பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரசை எதிர்க்கிறது. இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும் கோவாக்சின் அழிக்கிறது என தெரிவித்து உள்ளது.

Related Stories: