டெல்லி : மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை பணமதிப்பிழப்பிற்கு நிகராக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, புதிய தடுப்பூசி கொள்கையை பணக்காரர்களுக்கு சாதகமாகவும் ஏழை மக்களை புறக்கணிப்பது போல் உள்ளதாகவும் சாடியுள்ளார்.