×

தாந்தோணிமலை அசோக் நகரில் வடிகாலின்றி சாலையோரம் ஓடைபோல் ஓடும் கழிவுநீர்

*இது உங்க ஏரியா

கரூர் : கரூர் தாந்தோணிமலை அசோக் நகர் பகுதியில் வடிகால் வசதியில்லாததால் சாலையோரம் கழிவுநீர் ஓடை போல் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் அசோக் நகர் பகுதி உள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இங்கு அமைந்துள்ளன. இதில், கிழக்கு நகர்ப்பகுதியின் பெரும்பாலான தெருக்களில் சாக்கடை வடிகால் வசதி அமைத்து தரப்படவில்லை.

இதன் காரணமாக, வீடுகளின் முன்பே பள்ளம் தோண்டி கழிவுகள் வெளியேற்றும் நிலை இந்த பகுதியில் உள்ளது. எனவே, இந்த பகுதி முழுதும் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் எனவும் இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கழிவுநீர் வெளியேற்ற போதுமான வசதியின்மை காரணமாக மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசோக் நகர் கிழக்கு பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Dandonimayayan Ashok , Karur: Due to the lack of drainage facilities in the Ashok Nagar area of Karur Thanthonimalai, there is a tragedy that the roadside is flowing like a sewage stream.
× RELATED புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக...