இரவு நேர ஊரடங்கு உத்தரவால் காவிரி படுகையில் விளைகின்ற வாழை இலை, காய்கறிகள் வெளியூருக்கு அனுப்ப முடியவில்லை-டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை

*குரலற்றவர்களின் குரல்

திருவையாறு : தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு உத்தரவால் காவிரி படுகையில் விளைகின்ற வாழை, காய்கறிகள் நகருக்கு அனுப்பமுடியவில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு வாழை இலை காய்கறிகள், பூக்கள், பழங்கள் தினமும் வேன் மூலமும், ஆம்னிபஸ் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. விவசாயிகளை பொருத்தவரை பகல் நேரங்களில் பூக்கள், இலை காய்கறிகளை பழங்கள் அறுவடை செய்து இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் பெருநகரங்களுக்கு அனுப்புவது வழக்கம். பகலில் தான் அனுப்ப வேண்டுமென்றால் இரவு நேரங்களில் அறுவடை செய்ய இயலாது.

தற்போது இரவு ஊடரங்கு அறிவித்த நிலையில், வாகன போக்குவரத்து இரவில் தடைபட்டதன் காரணமாக அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள், காய்கறிகள், வாழை இலை, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க மறுக்கிறார்கள்.இதனால் பெருமளவில் காய்கறிகள் பழங்கள் வாழை இலை போன்ற அத்தியாவசிய விலை பொருட்கள் மறுபடியும் வயலில் வீணாகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

விவசாயிகளுக்கு இயற்கையாக பல நஷ்டங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது செயற்கையாக மேலும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பல விவசாயிகள் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பகல் நேரங்களில் இலையோ காய்கறிகள் தற்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வாகனங்களில் எடுத்து செல்வது இயலாது.

மேலும் அனைத்தும் வீணாகிவிடும். அதற்கு தமிழக அரசு மாற்று வழியாக, உடனடியாக குளிரூட்டப்பட்ட வாகனங்களை ஏற்பாடு செய்து விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை வீண் அடிக்காமல் பெருநகரங்களுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்கறிகள், வாழை இலை, பழங்கள் போன்றவற்றிற்கு இரவில் அனுமதி அளித்து விளைவித்த பொருளை வீணடிக்காமல் நகரங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அல்லது அரசு பேருந்துகளில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் எடுத்துவிட்டு காய்கறிகள் மற்றும் வாழை இலை பழங்கள் எடுத்து செல்ல குளிரூட்டப்பட்ட வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையென்றால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், அதேபோல கஷ்டப்பட்டு விளைவித்த அனைத்து வீணாகும் அபாயம் உள்ளது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னோடி விவசாயி சீனிவாசன் விவசாயிகள் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

>