முத்துப்பேட்டையில் பாதி பெயர்ந்து கிடக்கும் சிெமண்ட் சாலை-வாகனஓட்டிகள் கடும் அவதி

*இது உங்க ஏரியா

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட 13, 14வது வார்டின் பகுதியை இணைக்கும் பேட்டை சாலையிலிருந்து குட்டியார் பள்ளி முதல் துவங்கும் சிமெண்ட் சாலையானது ஜமாலியா தெரு, கோவிலான் தோப்பு, காமராஜர் காலனி, பந்தலடி திடல், ஊமை கொல்லை ஆகியவை கடந்து செம்படவன்காடு பெருமாள் கோயில் அருகே முடிகிறது.

இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் பள்ளிகள், வழிப்பாடு தளங்களும் உள்ளன. 2 கி.மீ. தூரமுள்ள இந்த சிமிண்ட் சாலை 7 வருடங்களுக்கு முன் இருந்த தார்சாலைக்கு பதிலாக போடப்பட்ட ஒரு சிமிண்ட் சாலையாகும். சாலை பணி நடைபெறும் போதே முறையான பணிகளை ஒப்பந்தக்காரர்கள் செய்யாததால் அடுத்த சில நாட்களிலேயே சாலை சேதமடைய துவங்கிவிட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் பெய்த மழைக்கு ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது.

தற்போது மக்கள் பயன்படுத்தவும் வாகனங்களில் செல்லவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளங்களுடன் சாலை பெயர்ந்து காணப்படுகிறது. பல பகுதியில் சாலையே காணவில்லை.

அதே போல் இப்பகுதியில் குளங்களை கடக்கும் சாலையில் தடுப்பு சுவர்கள் சாய்ந்து சாலை ஆபத்தான நிலையில் சேதமாகி பெயர்ந்து அந்தரத்தில் விழுவது போன்றுள்ளது. இதனால் இச்சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல் கனரக வாகனங்கள் செல்வதும் தடைப்பட்டுவிட்டது. மேலும் வாகன விபத்துக்களும் அதிகளவு ஏற்பட்டு வருகிறது.எனவே இனியும் காலதாமதப்படுத்தாமல் போரக்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>