ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்புகளின் கழிவு நீரும், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளும் ஓடைகளில் கலந்துவிடப்படுகின்றன. இதன் விளைவாக மழைக்காலங்களில் ஆற்றில் நீர் ஓடும்போது மாசடைந்த தண்ணீர் குளங்களை நிரப்புகிறது.

இதனால், நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, குளத்தில் வசிக்கும் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. ஆற்று நீரை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்துக் கொள்ள கூடாது என தமிழக அரசுக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைமடை பகுதி மக்களுக்கும் தூய்மையான நீர் சென்றடைய வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. நதிநீர் மாசடைவதை தடுப்பதற்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories:

>