சுற்றுலா பயணிகளுக்கு தடை கிருஷ்ணகிரி அணை பூங்கா வெறிச்சோடியது

கிருஷ்ணகிரி : கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பூங்காக்கள் மூடப்படும் என அறிவித்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், அவ்வாறு அவசியத் தேவைக்காக வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம், கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், நேற்று கிருஷ்ணகிரி  அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அணை பூங்கா வெறிச்சோடியது. அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில், படகுகள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.

Related Stories: