கொரோனா கால தடையை மீறி பொய்கை மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு வந்த மாடுகள்

வேலூர் : கொரோனா கால தடையை மீறி பொய்கை மாட்டுச்சந்தையில் 20க்கும் மேற்பட்ட மாட்டு வியாபாரிகள் கால்நடைகளுடன் வந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.வடமாவட்டங்களில் பிரசித்தமான வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு கொரோனா பரவல் காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை விதிக்கப்பட்டு முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று 20க்கும் மேற்பட்ட வெளியூர் வியாபாரிகள் மாடுகளுடன் வந்தனர்.

மொத்தம் 50க்கும் மேற்பட்ட கறவை, காளை மாடுகள், உழவு மாடுகள் கொண்டு வரப்பட்டன. அந்த மாடுகளை ஒரு சிலர் வாங்கிச் சென்றனர். இதுதொடர்–்பாக அந்த வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘கொரோனாவுக்காக இங்கு தடை விதிக்கப்பட்டது தெரியாது. தெரிந்து இருந்தால் வந்து இருக்க மாட்டோம்’ என்றனர். கடந்த வாரமும் இதேபோல் தடைமீறி மாட்டுச்சந்தை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>