2 கன்றுகள் ஈன்ற பசு பொதுமக்கள் ஆச்சரியம்

சூலூர் : சூலூர் அருகே சுல்தான்பேட்டை செஞ்சேரிப்புத்தூரில் வசித்து வருபவர் ராமசாமி (70) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் நேற்று காலை பசு மாடு ஒன்று 2 கன்றுகளை ஈன்றுள்ளது.

பசுமாட்டிற்கு ஒரே பிரசவத்தில் 2 கன்றுகள் பிறப்பது என்பது மிகவும் அபூர்வமான சம்பவம் ஆகும். இது பற்றிய தகவல் பரவியதும் சுற்று வட்டார பொதுமக்கள் ராமசாமி தோட்டத்திற்கு வந்து   2 கன்றுகளை ஈன்ற பசுமாட்டினை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Related Stories:

>