விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வர கூடிய சூழ்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது என்கின்ற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 16,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 800 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 91,574 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் 45 நாள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்த வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லாததால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். கொரோனா தடுப்பூசி மீண்டும் எப்போது கிடைக்கும் என்று மருத்துவர்களுக்கும் தெரியாததால் பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories:

>